அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிப்ரவரி 13-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வர இருந்த நிலையில், அவருடைய வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிப்ரவரி 13-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வர இருந்த நிலையில், இன்னும் சில நாட்களுக்கு அவருடைய வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே வருகை தரும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவர் பிப்ரவரி 18 அல்லது 19-ம் தேதி வருகை தரலாம் என்று என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருகை தரும் தேதி தள்ளி வைக்கப்பட்டதால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தாமதமானாலும், தி.மு.க-வுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் தேசிய தலைவர்கள் திருப்தி அடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
2019-ம் ஆண்டைப் போலவே, தொகுதிப் பங்கீடு பார்முலா பின்பற்றப்பட்டு பெரிய அளவில் நடைபெறும் என்பதால், தொகுதி எண்ணிக்கையைப் பொருத்தவரை தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 2019-ல் காங்கிரசுக்கு கொடுக்கப்பட்ட சில தொகுதிகளை மற்ற கூட்டணிக் கட்சிகளும் சில சமயங்களில் தி.மு.க நிர்வாகிகளும் கேட்பதால், தொகுதிப் பங்கீட்டில் சவால்கள் இருக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணத்தின் காரணமாக, தி.மு.க கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையும் முடிவில்லாமல் உள்ளது. அதே நேரத்தில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான தி.மு.க மூத்த தலைவர் டிஆர் பாலு, நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்காக டெல்லி சென்றுள்ளார். இதனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி முடிவை எட்டுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தாமதமோ, குழப்பமோ ஏற்படவில்லை என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணியை இறுதி செய்யவில்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளில் குழப்பம் உள்ளது என்றும், தி.மு.க-வில் இல்லை என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“