தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள்.
செந்தில் பாலாஜியின் தலைமை செயலக அறையிலும் இந்தச் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையின் போது பாதுகாப்புக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர்களை 6ஆவது நூழைவு வாயிலில் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் அறைகளில் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் பகிர்ந்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது கண்டனத்துக்குரியது.
புலனாய்வு அமைப்புகளை மோடி அரசு தவறாக நடத்துவது வெட்கக் கேடானது. இது ஒருபோதும் வெற்றி பெறாது. மாறாக எதிர்க்கட்சிகளை மேலும் வலுவூட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“