சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
மக்களவை தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதுபோல காங்கிரஸ் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை குழுவும், தமிழகத்தில் கே.எஸ். அழகிரி தலைமையில் தேர்தல் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளது. இதன்படி கடந்தமுறை போட்டியிட்ட 9 தொகுதிகள் உள்பட மேலும் 12 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகள் அடங்கிய விருப்ப படியல் திமுகவிடம் வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. டி.ஆர்.பாலு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 2024 மக்களைவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆதரமற்ற ஒரு பட்டியல் ஊடங்களில் வெளிவந்துள்ளது என்றும் அது தவறான செய்தி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“