நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 30-க்கும் மேற்பட்ரோருக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பி உள்ளது.
உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த 4ம் தேதி எரிந்த நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதை சந்தேக மரண பிரிவின் கீழ் உவரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினார்.
ஆனால், இந்த வழக்கில் தனிப்படையினர் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 23ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கில் கடிதத்தில் உள்ள நண்பர்கள் உட்பட 30ம்க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாளில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.