Congress | Rahul Gandhi | Lok Sabha Election | தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகை திங்கள்கிழமை (மார்ச் 4,2024) முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் செல்வ பெருந்தகை பேசுகையில், “2023 தென் மாவட்ட மழையின்போது ஒரு பைசா கூட வழங்காத மோடி தமிழ்நாடு வந்துள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஏற்றுக் கொள்ளாது. இது சமூக நீதியின் மண்” என்றார்.
தொடர்ந்து, “குஜராத் மீனவர்களை காப்பாற்றும மோடி அரசு, தமிழக மீனவர்களை கைவிட்டுவிட்டது” எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில், “நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், ரா அமைப்பும் தோல்வி அடைந்துவிட்டது” என்றார்.
இதையடுத்து இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த செல்வ பெருந்தகை, “அம்பானியும், அதானியும்தான் மோடியின் குடும்பம். தமிழ்நாடும், புதுச்சேரியும் காங்கிரசின் கோட்டை. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி சந்திக்கவில்லை” என்றார்.
முன்னதாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமார் நினைவிடத்தில் செல்வபெருந்தகை மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“