சிவாஜியின் போர்வாள்; ஜானகி அணிக்காக எம்.எல்.ஏ பதவியை உதறியவர்... ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னணி - Congress leader EVKS Elangovan Erode East by-election Sivaji Ganesan Janaki MGR | Indian Express Tamil

சிவாஜியின் போர்வாள்; ஜானகி அணிக்காக எம்.எல்.ஏ பதவியை உதறியவர்… ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னணி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பெரியாரின் பேரன், ஈ.வி.கே.எஸ். சம்பத்தின் மகன், சிவாஜியின் போர்வாள், ஜானகி அணிக்காக எம்.எல்.ஏ பதவியை உதறியவர் என அவருடைய சுவாரசியமான ரசியல் பின்னணி பற்றி பார்ப்போம்.

EVKS Elangovan hospitalized due to Heart attack
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பெரியாரின் பேரன், ஈ.வி.கே.எஸ் சம்பத்தின் மகன், சிவாஜியின் போர்வாள், ஜானகி அணிக்காக எம்.எல்.ஏ பதவியை உதறியவர் என அவருடைய சுவாரசியமான ரசியல் பின்னணி பற்றி பார்ப்போம்.

தமிழ்நாடு காங்கிரசில் அதிரடியான பேச்சுக்கும் அதிரடியான நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இவர் மறைந்த தனது மகன் திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ-வாக இருந்து இறந்த தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடுவது சோகமான விஷயம்தான். ஆனாலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பம்பரமாக சுற்ற ஆரம்பித்துவிட்டார்.

பெரியாரின் பேரன், ஈ.வெ.கி.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தனது அரசியல் குருவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஏற்றவர். அந்த அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு, தி.மு.க வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

எம்.ஜி.ஆரின் மரணத்தைத் தொடந்து, அவரது மனைவி ஜானகி முதலமைச்சரானார். ஜானகிர் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க மறுத்தது. அப்போது பிரதமராகவும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்த ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வையே ஆதரிப்போம் என்று தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

அன்றைக்கு காங்கிரசில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், “ஜானகி அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினார். ஆனால், அதற்கு காங்கிரஸ் தலைமை சம்மதிக்க வில்லை. இதனால், அன்றைக்கு காங்கிரசில் இருந்த சிவாஜி கணேசன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அப்படி பதவி விலகுவதாக் அறிவித்த சிவாஜி கணேசன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முக்கியமானவர்.

இதையடுத்து, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸிலிருந்து விலகி , தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கி, சிவாஜி அ.தி.மு.க ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 1989 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அப்போது, தமிழக முன்னேற்ற முன்னணி வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு 4வது இடம் கிடைத்தது. அதன்பிறகு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பலமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி தோல்விகளைக் கண்டிருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிலும், மறைந்த தனது மகன் எம்.எல்.ஏ-வாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஈரோடு கிழக்கு தொகுதி, இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், சிவாஜியின் போர்வாள்; ஜானகி அணிக்காக எம்.எல்.ஏ பதவியை உதறியவர், பெரியாரின் பேரன், ஈ.வி.கே. சம்பத்தின் மகன் என்ற அரசியல் பின்னணி ஒண்ட ஈ.வி.கே.ஸ் இளங்கோவன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பம்பரமாக சுற்றத் தொடங்கியிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Congress leader evks elangovan erode east by election sivaji ganesan janaki mgr