Advertisment

ஸ்டாலின் ஆளுநரை திரும்பப் பெறக் கோருவது சரிதான்; காங். மூத்த தலைவர் கபில் சிபல் ஆதரவு

மாநில அரசு நிர்வாகத்தில் தலையீடு, இந்துத்துவா திட்டங்களுடன் செயல்படுவதைக் காரணம் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோருவதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Congress leader Kapil Sibal, Kapil Sibal supports MK Stalin's request to remove Governor RN Ravi, Governor RN Ravi, ஸ்டாலின் ஆளுநரை திரும்பப் பெறக் கோருவது சரிதான், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதரவு, ஆளுநர் ஆர் என் ரவி, Congress, DMK, Tamil Nadu, Kapil Sibal supports MK Stalin, MK Stalin request to remove Governor RN Ravi

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின்

மாநில அரசு நிர்வாகத்தில் தலையீடு, இந்துத்துவா திட்டங்களுடன் செயல்படுவதைக் காரணம் காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோருவதற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் ஆளும் தி.மு.க அரசு இடையே நடந்துவரும் மோதல்களால் நிலவும் அரசியல் குழப்பங்களூக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்பது சரியே என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியுள்ள 19 பக்க புகார் கடிதத்தில், ஆர்.என். ரவி ரவியின் பல்வேறு நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு அவர் ஆளுநராக இருக்க தகுதியற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் திங்கள்கிழமை பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஆளுநர்கள் குறித்து அம்பேத்கர்: “இந்த நிர்வாகி முற்றிலும் அலங்கார நிர்வாகி, நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை..” என்று குறியுள்ளார்.

மேலும், “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இந்துத்துவா திட்டங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் நிர்வாகத்தை சீர்குலைக்கிறார்கள், நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள், வெறுப்பைத் தூண்டுகிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கேட்பது சரிதான்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் தமிழக மக்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிரானது என்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பல்வேறு செயல்பாடுகள் அவர் ஆளுநராக தகுதியற்றவர் என்பதை காட்டுகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேவையில்லாமல் காலதாமதம் செய்கிறார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற விசாரணைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டிய ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசு அனுப்பிய ஆவணங்களைப் பொருட்படுத்தாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு ஆளுநர் எதிரியைப் போல் செயல்படுகிறார்.” என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதன் மூலம் ஆளுநர் மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டத்தை மீறல் செயலில் ஈடுபட்டுள்ளர் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆளுநர் போலீஸ் விசாரணையில் குறுக்கிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆதரிக்கிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய நிலையில், குழந்தை திருமணம் நடைபெற்ற வீடியோ வெளியாகி ஆளுநரின் கருத்து பொய்யானது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறினார். பின்னர், அவர் அதை நிறுத்தி வைத்தார் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவி ஜூலை 8 ஆம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு விஷயங்களில், குறிப்பாக நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளும் தி.மு.க கட்சியுடன் சர்ச்சைக்குரிய வகையில் மோதலில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும், வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக பாலாஜியை அமலாக்க இயக்குநரகம் கைது செய்ததைத் தொடர்ந்து, இந்த மோதல் அதிகரித்தது. முதலில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதன் மூலம் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுத்தார். சில மணி நேரங்களிலேயே இந்த முடிவை நிறுத்தி வைத்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையால் ரவியின் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதாக தி.மு.க தரப்பு கூறியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Governor Rn Ravi Kapil Sibal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment