Advertisment

பெண் உரிமைக்காக நூற்றாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் பெரியார் – பிரியங்கா காந்தி

’பெண் ஏன் அடிமையானாள்’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பியவர் பெரியார் – தி.மு.க மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேச்சு

author-image
WebDesk
New Update
priyanka gandhi

’பெண் ஏன் அடிமையானாள்’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பியவர் பெரியார் – தி.மு.க மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேச்சு

சமூக மாற்றத்துக்கான புரட்சி உருவான இடம் தமிழ்நாடு, பெண்கள் உரிமைக்காக நூற்றாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் என தி.மு.க மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புகழாரம் சூட்டி உள்ளார்.

Advertisment

சென்னை நந்தனத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி, தி.மு.க அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு பெண் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரியங்கா காந்தி "இந்திய பெண்களின் உரிமை பற்றி நான் பேசப் போகிறேன். நீங்களே என் தாய், என் சகோதரி. இங்கே இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்." என தமிழில் தனது உரையை தொடங்கினார். மேலும், பிரியங்கா காந்தி தனது உரைகளுக்கு இடையே தமிழில் பேசி அசத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "32 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்வின் இருண்ட இரவில், நான் முதன்முதலில் தமிழக மண்ணில் கால் வைத்தேன். நான் என் தந்தையின் சிதைந்த உடலை சேகரிக்க வந்தேன். சில மணி நேரங்களுக்கு முன் தான், என் தந்தை கொல்லப்பட்டார். நானும் என் அம்மாவும் விமானத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது, ​​பெண்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்துகொண்டு என் அம்மாவை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டது. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் இடையே விக்கவோ அழிக்கவோ முடியாத ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தியது

பெண்களே இந்தியாவின் தூண்கள். பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். பெண்களை மையமாக வைத்து தான் குடும்பம் கட்டமைக்கப்படுகிறது. இந்தியாவில் பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்திக்கிறார்கள். இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பல தலைமுறைகளை தாண்டி நீடிக்கும் அடக்குமுறையிலிருந்து விடுபட பெண்களாகிய நீங்கள் தொடர்ந்து போராடி வருகிறீர்கள்.

சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. ’பெண் ஏன் அடிமையானாள்’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பியவர் பெரியார். பெண் உரிமைக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் பெரியார். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதை எதிர்த்துப் பல கட்டுரைகளை பெரியார் எழுதி உள்ளார். அண்ணாவும், கலைஞரும் பெரியார் வழியில் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். சமத்துவத்தை முழுமையாக நாம் பெற்றிட இன்னும் உழைத்திட வேண்டும். உடனடியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கான முக்கியத்துவத்தை அரசியலில் அதிகமாக்க வேண்டும்.

அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களின் சகிப்புத் தன்மையை புகழ்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும். பெண்கள் மனித குலத்திற்கே ஆதாரமாக விளங்குகின்றனர். பெண்கள் ஒன்று திரண்டால் எந்த சக்தியும் அதற்கு எதிராக நிற்காது. அன்பையும், போராடும் குணத்தையும் சமூகத்துக்கு கற்றுக் கொடுத்ததே பெண்கள் தான். பெண்கள் சமத்துவத்தை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. மாற்றத்திற்கான சரியான தளத்தில்தான் நாம் இங்கு நின்று கொண்டு உள்ளோம். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடுவதற்காக நாம் இங்கு திரண்டு உள்ளோம்." இவ்வாறு பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Congress Priyanka Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment