Advertisment

'நாக்கை அறுப்போம்': ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த தமிழக காங். பிரமுகர்

அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

author-image
WebDesk
New Update
Congress leader Manikandan, Congress leader threatens to judge, ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம், மிரட்டல் விடுத்த காங் நிர்வாகி, Congress leader threatens Will chop tongue off to judge who sentenced Rahul Gandhi

ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம், மிரட்டல் விடுத்த காங் நிர்வாகி

அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

2019-ம் ஆண்டு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது, கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதியின் நாக்கை அறுப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அவருடைய இந்த கருத்துக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நீரவ் மோடி, லலித் மோடி, எல்லா திருடர்களின் பெயர்களும் எப்படி மோடி என்று இருக்கிறது என்று விமர்சனம் செய்து பேசினார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக அவர் மீது 2019-ம் ஆண்டு கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, சூரத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். வர்மா, கடந்த மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கத்துடன் பா.ஜ.க அரசு அவசரமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்ப்புக் குரல்களை அமைதியாக்கப் பார்க்கிறது என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸின் எஸ்சி/எஸ்டி பிரிவு சார்பில், திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிர்ஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் மணிகண்டன் கூறியதாவது: மார்ச் 23-ம் தேதி சூரத் நீதிமன்ற நீதிபதி எங்கள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி எச். வர்மா. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் நாக்கை அறுப்போம்” என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதி எச். வர்மாவின் நாக்கை அறுப்போம் என்று மிரட்டல் விடுத்துப் பேசிய காங்கிரஸ் நிர்வாகி, மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment