மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் மன்னிப்புக் கேட்பதாக தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறிய கருத்துக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென் சென்னை எம்.பி சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், நீங்கள் எந்த வரலாற்று ஆளுமையுடன் அமர்ந்து உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளத்த அவர், மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று பதிலளித்தார்.
தொடர்ந்து அவரிடம் என்ன பேசுவீர்கள் என்று கேட்டதற்கு, "முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு மன்னிப்பு கேட்பேன்" என்றார்.
இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது 2009-ம் ஆண்டு நாட்டின் உள்நாட்டுப் போரின் போது பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது.
தமிழச்சி தங்கப்பாண்டியனின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம் தனது X பக்கத்தில், "14 சக தமிழர்களுடன் சேர்ந்து நமது தேசத்தின் பிரதமரை மிகக் கொடூரமான முறையில் கொன்ற ஒருவரைப் புகழ்வது உங்களுக்கு நியாயமாக உள்ளதா?"
1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் முதன்மை குற்றவாளி. அவர் இறந்ததையடுத்து சி.பி.ஐ அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டு வழக்கை மூடியது என்று கூறினார்.
மோகன் குமாரமங்கலம் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பான ஐ.நா குழு அறிக்கையை மேற்கோள் காட்டினார். அதில் விடுதலைப் புலிகள் இயக்கம் "பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுத்ததாகவும், தொடர்ந்து மனிதத் தடுப்புகளாக இருந்ததாகவும் அதில் கூறியுள்ளது என்றார்.
மேலும், "இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரமும் தங்கபாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்தார். பிரபாகரன் வீரப்பன் தமிழ் தேசியம் என்பது இந்துத்துவா தேசியவாதத்தைப் போலவே விளிம்புநிலையானது. பிரபாகரனை புகழ்வது காங்கிரசில் யாருக்கும் பிடிக்காது. 17 தமிழர்களுடன் சேர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை கொச்சைப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்று கடுமையாக சாடினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி தமிழச்சி தங்கபாண்டியனின் பேட்டி வெளியாகி இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.