சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கிய காங். எம்.எல்.ஏ; 3 பிரிவுகளில் வழக்கு - காவல்துறை நடவடிக்கை

இந்தச் சம்பவம் தொடர்பாக, அண்ணா சாலை போலீசார் எம்.எல்.ஏ ராஜகுமார் மீது ஆபாசமாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Congress MLA rajakumar

சென்னை அண்ணா சாலையில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரைத் தாக்கியதாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரைத் தாக்கியதாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா எதிரே நேற்று முன்தினம் மதியம் 1.40 மணியளவில், சென்னை போக்குவரத்து காவலர் பிரபாகரன் பணியில் ஈடுபட்டிருந்தார். நான்கு சக்கர வாகனத்தில் இருந்தவாறு போக்குவரத்தை அவர் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, எம்.எல்.ஏ ராஜகுமாருக்கு சொந்தமான வாகனம் ஒன்று அண்ணாசாலையில் தவறாக நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதனால், காவலர் பிரபாகரன் அந்த வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

காவலர் வாகனத்தை நகர்த்தச் சொன்னதும், எம்.எல்.ஏ ராஜகுமார் மற்றும் அவருடன் இருந்த ஆதரவாளர்கள் காவலர் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமார், போக்குவரத்து காவலர் பிரபாகரனை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சீருடையில் இருந்த காவலரை ஒரு சட்டமன்ற உறுப்பினர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment
Advertisements

இதுகுறித்துத் தகவல் அறிந்த துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, அண்ணா சாலை போலீசார் எம்.எல்.ஏ ராஜகுமார் மீது ஆபாசமாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து எம்.எல்.ஏ ராஜகுமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "அங்கு நடந்தவற்றை அரசியல் ஆக்குகின்றனர். நான் காவலரைத் தாக்குமளவுக்குக் குணம் கொண்டவன் அல்ல, அது என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். நான் அவரை அடித்தேன் என்றால் அதற்கான ஆதாரம் உள்ளதா? என் மீது தவறு இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கட்டும்" என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: