கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜே. ஜி. பிரின்ஸ் (குளச்சல்) மற்றும் ராஜேஷ் குமார் (கிள்ளியூர்) ஆகியோர், தற்போதைய மத்திய அரசு 1 முதல் 10 வகுப்பு வரையிலான சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்திவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும், நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை மீண்டும் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், “கடந்த காலங்களில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பொன். ராதாகிருஷ்ணன் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை கொடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினார்.
ஆனால் தற்போது சிறுபான்மையின மாணவர்களின் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவர் மௌனம் காக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து, “இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட வேண்டும். மத்திய அரசு நிறுத்திவைத்துள்ள சிறுபான்மையின கல்வி உதவித் தொகையை விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, “இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உறுதியாக நிற்கும். சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க போராட்டம் நடத்தும்” என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூட்டாக தெரிவித்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/