அண்ணாமலை செருப்புக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பா? தமிழக காங்கிரஸ் எம்.பி கடும் எதிர்ப்பு

அண்ணாமலை தனது செருப்புக்கு மத்திய பாதுகாப்பு படை வீரரை காவல் காக்க வைத்தாகக் கூறி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது செருப்புக்கு மத்திய பாதுகாப்பு படை வீரரை காவல் காக்க வைத்தாகக் கூறி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Manickam

அண்ணாமலை தனது செருப்புக்கு மத்திய பாதுகாப்பு படை வீரரை காவல் காக்க வைத்தாகக் கூறி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

அண்ணாமலை தனது செருப்புக்கு மத்திய பாதுகாப்பு படை வீரரை காவல் காக்க வைத்தாகக் கூறி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்ணாமலை தனது செருப்புக்கு மத்திய பாதுகாப்பு படை வீரரை காவல் காக்க வைத்து இந்திய நாட்டு வீரர்களை கொச்சைப்படுத்தி விட்டதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். 

அண்ணாமலையின் காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரர் பாதுகாத்த நிகழ்வை தான் சும்மா விடப்போவதில்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கே நேரடியாக கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தனது காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரரை பாதுகாக்க வைத்ததற்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.

Advertisment
Advertisements

மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை அவருக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்புக்கு பிரச்சனையில்லை என்றும் அப்படியிருக்கும்போது அவருக்கு எதற்கு Z பிரிவு செக்யூரிட்டி வழங்க வேண்டும் என்றும் எனவும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், நாட்டிற்காக உழைக்கும் வீரர்களுக்கு பா.ஜ.க-வும் சரி, அண்ணாமலையும் சரி மரியாதை கொடுக்கவில்லை என்று கூறினார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியதை வைத்து, பா.ஜ.க-வினர் தொடர்ந்து சர்ச்சை செய்து வரும் நிலையில், இப்போது அண்ணாமலையின் காலணியை மத்திய பாதுகாப்பு படை வீரர் காவல் காத்த நிகழ்வை வைத்து சர்ச்சை உருவாக்கியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றின்போது, அண்ணாமலை தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: