காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
இன்று மாலை தொடங்கிய இந்த நடைபயணத்திற்கு முன்பாக பேசிய ராகுல்காந்தி கூறுகையில்,
3 சமுத்திரமும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. தமிழகத்துடனான எனது உறவு ஆழமானது. நான் ஒவ்வொருமுறை தமிழகம் வரும்போதும், மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் இருக்கிறேன். தற்போதைய சூழலில் தேசத்தை ஒற்றுமை படுத்தக்கூடடிய அவசியம் எழுத்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
பாஜக, மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டின் தேசிய கொடியை தனிப்பட்டி கொடியாக பார்க்கிறார்கள். ஆனால் தேசிய கொடி என்பது தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமானது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு குடி மகனுக்கும் சொந்தமானது. இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வெல்லப்பட்டது தான் தேசிய கொடி.
தேசிய கொடி தற்போது பெரிய தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின்ஒவ்வொரு குடிமகனின் உரிமையையும் நிலைநாட்டுவது தேசியகொடி. இந்திய மக்களைபாஜக புரிந்துகொள்ளவில்லை. சிபிஐ அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையை வைத்துக்கொண்டு எதிர்கட்சியினரை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்
ஆர்எஸ்எஸ் பாஜகவினால் ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறது. என்று பேசிய ராகுல்காந்தி, கன்னியாகுமரியில இருந்து தொடங்கும் தனது நடை பயணத்தை அன்புச்சகோதரர் ஸ்டாலின் தொடங்கி வைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி என்று கூறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“