/tamil-ie/media/media_files/uploads/2023/02/tio.jpg)
திண்டுக்கல் மாவட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்யப்பட்ட மாடு புதைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் அலுவகலம் இருக்கிறது. இந்நிலையில் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்யப்பட்ட மாடு புதைக்கப்படதாக, புகார் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் செய்த சோதனையில் இறந்த மாடு புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மாட்டின் உடல் பாகங்கள், நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. மேலும் அதை ஆய்வு செய்ததில் அது காளை மாடு என்று கண்பிடிக்கப்பட்டது. மாட்டின் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் மாட்டின் கழிவுகள் அகற்றப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.