ராகுல் எம்.பி. பதவி பறிப்பு.. புதுச்சேரியில் காங்கிரஸார் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்தது.

Rahul Gandhi sentenced in defamation case
புதுச்சேரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றம் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்தது. “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம்” என்ற தலைப்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் வாயில் கறுப்பு துணி கட்டி இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொது செயலாளர் சங்கர், ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் மற்றும் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Congress protest in puducherry

Exit mobile version