ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வாரம் மனு தாக்கல் செய்யப்படும், என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இலவச மின்சாரம் பற்றி அச்சமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
”உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதிய மறுஆய்வு மனு அடுத்த சில நாட்களில் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும்,” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓருவர் கூறினார். இந்த வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன் அல்லது ஸ்ரீஹரன், ஆர்.பி ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நவம்பர் 11ஆம் தேதி உத்தரவிட்டது. அவர்களின் தண்டனையை நீக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
நளினி, ரவிச்சந்திரன் தவிர சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.
சிறைவாசத்தின் போது அவர்களின் நடத்தை திருப்திகரமாக இருந்தது என்பதையும் உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil