மணிப்பூர் பெண்களுக்கு குரல் கொடுக்காத குஷ்பு, திரிஷாவுக்காக எழுந்து வந்திருக்கிறார் என்ற தி.மு.க-வைச் சேர்ந்தவரின் கடுமையான விமர்சனத்துக்கு, நடிகை குஷ்பு, நான் ‘சேரி லாங்குவேஜ்’-ல் பேச முடியாது’ என்று சேரி மக்களை இழிவுபடுத்தும் விதமாக கூறியதாக காங்கிரஸ் கட்சி மற்றும் ம.ஜ.க பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன் குமார், “பட்டியல் சமூக மக்கள் குறித்த கருத்துக்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் குஷ்பூவின் வீடு முற்றுகையிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், தி.மு.க-வினரின் விமர்சனத்துக்கு பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, “நான் சேரி மொழியில் பேச முடியாது” என்று தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது. நடிகை குஷ்பு, சேரி மக்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி காயத்திரி ரகுராம் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு நடிகை குஷ்பு, “பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்ற அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தை வைத்தே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன்’ என விளக்கம் அளித்தார்.
இருப்பினும், நடிகை குஷ்பு ‘சேரி லாங்குவேஜ்’ (சேரி மொழி) பேச மாட்டேன் என்று சேரி மக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதற்கு மேலும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
நடிகை குஷ்பு ‘சேரி லாங்குவேஜ்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி நடிகை குஷ்பு பட்டியலின மக்களை அவமதித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு கடும் கண்டனம் தெரிவித்து, சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன்குமார் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சேரி மொழியில் என்று பேசி பட்டியலின மக்களை குஷ்பு நேரடியாக அவமதித்துள்ளார். பா.ஜ.க-வுக்கே உரிய சாதிய வன்மத்தை விஷமாகக் கக்கியிருக்கிறார் குஷ்பு. நீட் தேர்வாளர் அனிதா தற்கொலை செய்து கொண்டபோது குஷ்பு எங்கே போனார்?
பா.ஜ.க-வின் கே.டி. ராகவன் என்ற தலைவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசியபோது எங்கே போனார் குஷ்பு? மணிப்பூரில் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது எங்கே போனார்?’ என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், குஷ்புவுக்கு மகளிர் நலன் சுத்தமாக இல்லை எனவும் அவர் தன் பதவியைத் தக்க வைக்கவே இப்படி நாடகமாடுகிறார்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன் குமார், “பட்டியல் சமூக மக்கள் குறித்த கருத்துக்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் குஷ்பூவின் வீடு முற்றுகையிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், குஷ்பு இந்தப் பதிவை நீக்கிவிட்டு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையெனில் பட்டியலின மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, தமிநாட்டு எளிய மக்களின் பாமர மொழியை போபாலில் சேரி மொழி என்று பேசியது ஏற்க முடியாது என்று கூறிய மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டித்துள்ள தமிமுன் அன்சாரி நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, “தமிநாட்டு எளிய மக்களின் பாமர மொழியை போபாலில் சேரி மொழி என்று பேசியது ஏற்க முடியாது. இதனை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.