காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு புதிய பதவி : தமிழக அரசு அறிவிப்பு

Peter Alphonse New Post In Tamilnadu : தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamilnadu Minorities Commission New Chairman : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் , கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் அன்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால்  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 1989 மற்றும் 1991 ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான பீட்டர் அல்போன், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Congress senior peter alphonse new chairman of tamilnadu minorities commission

Next Story
கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக்குகள் அமைக்க தமிழக அரசு முடிவுTamil Nadu news in tamil: TN Govt to set up special post-Covid care clinics
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X