Advertisment

'பா.ஜ.க, அ.தி.மு.க-வை மக்கள் ஏற்க மாட்டார்கள்'.. 'பணத்தால் ஜெயிச்சிருக்காங்க' : ஈரோடு தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியைச் நோக்கி உள்ளார்.

author-image
WebDesk
New Update
'பா.ஜ.க, அ.தி.மு.க-வை மக்கள் ஏற்க மாட்டார்கள்'.. 'பணத்தால் ஜெயிச்சிருக்காங்க' : ஈரோடு தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து

Erode East by-Election Results 2023

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க, நாம் தமிழர், தே.மு.தி.க, சுயேட்சை என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். அ.தி.மு.க சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன. 7 சுற்றி வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு 19,936 வாக்குகள் பெற்று 2-ம் இடத்திலும், நாம் தமிழர் மேனகா 3,830 வாக்குகள் பெற்று 3-ம் இடத்திலும்உள்ளார்.

Advertisment

இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், வெற்றியின்பெரும் பங்கு முதல்வர் ஸ்டாலினையே சேரும். மதசார்பற்ற கூட்டணி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுவதாக அதிமுகவே கூறியுள்ளது. வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இப்போது இல்லை என்று கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர், மாநிலத்தின் சிறுபான்மை பிரிவு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், இது முதல்வருக்கு கிடைத்த அங்கீகாரம். 2 ஆண்டு மக்கள் நலப் பணிகள், மக்களுக்கும் அவருக்கமான தொடர்பு, மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள்
மத்தியில் இருக்கும் வரவேற்பு. பாஜக, அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை இந்த வெற்றி செய்தி காட்டுகிறது. இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்றார்.

பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் கூறுகையில், பெரிய அளவிலான பணத்தோடு தி.மு.க வெற்றி பெற்றுள்ளார்கள். அதிகாரம், பணத்தை வைத்து வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்ற மாய தோற்றத்தை உருவாக்க வேண்டாம். பலத்தால் அல்ல பணத்தால் ஜெயிச்சிருக்கிறார்கள் என்றார்.

தேர்தல் நடைபெற்றதா? ஏலம் நடைபெற்றதா?

கடந்த முறை நாம் தமிழர் 7.5 சதவீதம் வாக்கு பெற்றது. இங்கு தேர்தல் நடைபெற்றதா? ஏலம் நடைபெற்றதா? பணம், காசு, பரிசு பொருட்கள் வழங்கினார்கள். ஜனநாயகப் படுகொலை செய்தார்கள். கேட்டது நீட் விலக்கு, அங்கு கொடுக்கப்பட்டது காமாட்சி விளக்கு என்றார்.

அ.தி.மு.க உடைந்துள்ளது. எந்த ஒரு இயக்கமும் உடைந்து நின்றால் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்று புகழேந்தி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment