மத்திய அரசின் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படும் தொகுதி மறு வரையறைக்கு எதிராக ஆதரவுகளை திரட்ட, ஒடிசா, தெலுங்கானா உள்பட 7 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க திமுக நிர்வாகிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
அந்தவகையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட தமிழ்நாடு குழு ஒன்று இன்று ஒடிசா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட திமுக சார்பில் 2 பிரதிநிதிகள் இன்று ஒடிசா செல்கின்றனர். அவர்கள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் ஆவர்.
இருவரும் (மார்ச் 11) இன்று ஓடிசா செல்கின்றனர். இன்று ஒடிசா சென்று நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் தொகுதி மறுவரையரை குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல நாளை (மார்ச் 12) அமைச்சர் பொன்முடி மற்றும் அப்துல்லா கொல்கத்தா செல்ல உள்ளனர். மார்ச் 13 அன்று அமைச்சர் கே.என். நேரு மற்றும் என்.ஆர். இளங்கோ தெலங்கானா செல்ல உள்ளனர்.