scorecardresearch

பற்றி எரிந்த கண்டெய்னர்.. தீக்கிரையான 40 பைக்குகள்.. நடந்தது என்ன?

மராட்டிய மாநிலத்தில் இருந்து சென்னை வந்த கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 40 சொகுசு பைக்குகள் சாம்பலாகின.

Container truck fire accident in Avadi Chennai
வாகனம் ஒன்று தீக்கிரையான கோப்பு படம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கவரப்பாளையத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
லாரி தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளத்தில் காட்டுத் தீப் போல் பரவின. முன்னதாக, இது தொடர்பாக போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், “இந்த கண்டெய்னர் லாரியை புனேயில் இருந்து சதாம் உசேன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். நேற்று இரவு 1 மணிக்கு லாரி இங்கு வந்துள்ளது.
தொடர்ந்து இன்று பைக் ஷோரூமுக்கு செல்ல இருந்த நிலையில், மின்சார வயர் லாரி மீது அறுந்து விழுந்ததில் லாரி மீது தீப்பற்றியது.

இதில் லாரிக்குள் இருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 40 பஜாஜ் சொகுசு பைக்குகள் தீக்கிரையாகின” எனத் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவ பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
தீ விபத்து நடந்த பகுதி அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இது அப்பகுதி குடியிருப்புவாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Container truck fire accident in avadi chennai

Best of Express