எஸ்.வி.சேகரை கைது செய்யாத போலீஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. ஆனாலும் அவரை போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் நடிகரும், பிஜேபி பிரமுகருமான எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இந்த பதிவு தொடர்பாக அளித்த புகாரில் எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யதனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ராமத்திலகம், கடுமையான கண்டனங்களுடன் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதும் முன் ஜாமீன் மறுக்கப்பட்டு, விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமின் கோரிக்கை வைக்க உத்தரவிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம் வரை சென்ற எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை அவரை கைது செய்யாத சென்னை மத்திய குற்றப்பிரிவில் சைபர் கிரைம் ஆய்வாளருக்கு எதிராக பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

contempt of court case against police who did not arrest SV Sekar!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close