கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.
Advertisment
டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலைகளில் மரம் முறிந்து விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் டவுன் பகுதியில் கலைஞர் நகர், சர்தார் பாய் வீடு அருகில் நகராட்சி தடுப்பு சுவர் நடை பாதை இடிந்து உள்ளது.
இதனை வால்பாறை வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சோலையர் அன்னைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 165 அடி உயரம் கொண்ட அணையானது தற்போது காலை நிலவரப்படி 48.23"அடி நீர் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் கன மழை காரணமாக இரண்டாம் நாளாக இன்றும் வால்பாறையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil