தற்காலிக செவிலியர்கள் சம்பளம் உயர்வு… முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழ்நாடு அரசு தற்காலிக செவிலியர்களுக்கான ஊதியத்தை 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில், தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு, ஆரம்ப ஊதியமாக, 7 ஆயிரத்து 700…

By: July 26, 2018, 9:06:04 AM

தமிழ்நாடு அரசு தற்காலிக செவிலியர்களுக்கான ஊதியத்தை 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில், தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு, ஆரம்ப ஊதியமாக, 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்படுவதாகவும் இதனை 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாகவும், கூறியியுள்ளார்.

இந்த ஊதிய உயர்வு இந்தாண்டு ஏப்ரல் ஒன்றிலிருந்து, முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும், இவர்களுக்கு ஆண்டுதோறும் 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதன்மூலம், தொகுப்பூதியம் பெறும், 12 ஆயிரம் செவிலியர்கள் பயனடைவார்கள் என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Contract nurse salary increased by tamilnadu government

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X