மழை நீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டரை, சென்னை மாநகராட்சி 10 நாட்களில் 2 முறை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இது ஒப்பந்ததாரர்களை மிகவும் பாதித்துள்ளது.
ரூ. 250 கோடி மதிப்புள்ள மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான டெண்டரை 10 நாட்களில் சென்னை மாநகரட்சி 2 முறை ரத்து செய்துள்ளது. டெண்டர் ஆவணங்களை பொருத்தவரையில், கடந்த மாதம் 25ம் தேதி டெண்டருக்கான ஏலம் நடைபெறுவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த தேதி மே3-ம் தேதிக்கு தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் டெண்டருக்கான ஏலம் முடியும் தருவாயில் இருந்தபோது, மீண்டும் மே 11-ம் தேதிக்கு ஏலம் தள்ளிபோனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதாவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.விக.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகாலை அமைக்க இந்த டெண்டர் விடும் ஏலம் நடைபெறுகிறது.
ஒப்பந்ததாரர் ராமா ராவ் இது குறித்து பேசுகையில் “ பல ஒப்பந்ததாரர்கள் இந்த டெண்டரை எடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் இதற்கான ஏலத்தை கடைசி நேரத்தில் சென்னை மாநகராட்சி ரத்து செய்கிறது. இப்படி நடந்தால், மழைக்காலம் வருவதற்கு முன்பாக வடிகால் அமைக்கும் பணிகளை முடிக்க முடியாது ” என்று கூறினார்.
டெண்டருக்கான ஏலம் தொங்கிய ஒரு மணி நேரத்திற்குள் டெண்டர் தொடர்பான ஆவணங்களை அவர்கள் வெளிப்பாடையாக அறிவிக்க வேண்டும், ஆனால் மழை நீர் வடிகால் தொடர்பான டெண்டர்களில் ஒரு நாள் கழித்தே இது நடைபெறுகிறது என்றும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இதுபோல காலம் தாழ்த்துவது, ஊழல் நடைபெறுகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி கூறுகையில் “ டி.எஸ்.டி தொகையை பதிவு செய்யவும். அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய நேரம் வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கூறியதால், டெண்டர் ஏலம் தள்ளிப்போடப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“