scorecardresearch

இசைக்கப்பட்ட தேசிய கீதம், நாற்காலியில் அமர்ந்திருந்த மேயர்.. வெடித்த சர்ச்சை

நெல்லை மேயர் சரவணன், ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் எழுந்திருக்காமல் இருக்கையில் அமர்ந்தபடியே இருந்தனர்.

When the National Anthem was played Nellai Meyer was sitting on the chair
தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நெல்லை மேயர் அமர்ந்திருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது

குடியரசு தின விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, நெல்லை மேயர் சரவணன், ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் இருக்கையில் அமர்ந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் 74ஆவது குடியரசுத் தினம், வியாழக்கிழமை (ஜன.26) நாடு முழுக்க உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியிலும் சிறப்பாக குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் நெல்லை மேயர் சரவணன், ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தி என பலரும் கலந்துகொண்டனர். விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது நெல்லை மேயர் சரவணன், ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் எழுந்திருக்காமல் இருக்கையில் அமர்ந்தபடியே இருந்தனர்.
இந்தக் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றன. நாட்டுப்பண் இசைத்த போது எழுந்திருக்காத மேயர் மற்றும் ஆணையர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Controversy because nellai mayor was sitting when the national anthem was played