மகன் நியூசிலாந்தில் மர்ம மரணம் : உடலை கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

Madurai man dies in New zealand : பாலமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது உடலை, இந்தியா கொண்டுவருவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்

தனது மகன் பாலமுருகன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவனது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு உதவிகள் செய்யப்படுவது மட்டுமல்லாது, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை கலெக்டரிடம் அளித்த மனுவில் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரையடுத்த அழகாபுரிபட்டியை சேர்ந்த முருகேசன் – நாகேஸ்வரி தம்பதியின் புதல்வன் பாலமுருகன். சமையல்கலையில் சிறந்துவிளங்கிய பாலமுருகன், டில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் பணியாற்றியுள்ளார். இதனிடையே, நண்பர்களின் உதவியால், இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரத்தில் உள்ள பெர்மிட் ரூம் என்ற ஹோட்டலில் பணிக்கு சேர்ந்தார்.

பாலமுருகனின் முதல் மனைவி மாரடைப்பால் இறந்ததை தொடர்ந்து, கவிஷாஸ்ரீ என்பவரை, கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன், கவிஷாஸ்ரீயிடம், பாலமுருகன் போனில் பேசியுள்ளார். அவர் பேசிய சிறிது நேரத்திலேயே, பாலமுருகனின் நண்பர் பாண்டி என்பவர், கவிஷாஸ்ரீக்கு போன் செய்து, பாலமுருகன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

பாலமுருகனின் உடல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், குடும்ப பிரச்னை காரணமாகவே, அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக பாலமுருகன் பணிபுரிந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் மனு : இதனிடையே, பாலமுருகனின் பெற்றோர், சகோதரர்கள் மதுரை கலெக்டர் டாக்டர் வினயை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, பாலமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது உடலை, இந்தியா கொண்டுவருவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய விசாரணை நடத்தி தங்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close