/tamil-ie/media/media_files/uploads/2022/12/Covai-Flight.jpg)
அரசுப் பள்ளி மாணவ- மாணவியருடன் விமான பயணம் மேற்கொண்ட குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியை படத்தில் காணலாம்.
கோவையை பார்வையிட வந்த அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் வரவேற்றனர்.
Rain Drops NGO சார்பில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை முதல் முறை விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் வருகை தந்திருந்தனர்.
இவர்களுடன் திருநங்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கோவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை முதல் முறை விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்த அரசு பள்ளி மாணவ மாணவியர்களை காணலாம். pic.twitter.com/VZE55KBA2e
— Indian Express Tamil (@IeTamil) December 17, 2022
ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் திருநங்கைகள் கோவை மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகம், பூங்கா ஆகியவற்றை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவ- மாணவியருடன் விமான பயணம் மேற்கொண்ட குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி. pic.twitter.com/i0lwpNYt3l
— Indian Express Tamil (@IeTamil) December 17, 2022
இந்த வரவேற்பு நிகழ்வின் போது கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பூமா மற்றும் NGO நிறுவன பிரதிநிதிகள் உடன் இருந்தனர். நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியும் மாணவர்களுடன் வருகை புரிந்துள்ளார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.