/indian-express-tamil/media/media_files/2025/08/14/coolie-fan-celebration-2025-08-14-10-38-35.jpg)
5,000 ஸ்கிரீன்களில் 'கூலி' படம் ரிலீஸ்... கோவை, திருச்சியில் ரஜினி பேன்ஸ் உற்சாக கொண்டாட்டம்!
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம் இன்று வெளியாகி, கோவையில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் பல சாதனைகளை கூலி படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
திரையரங்குகள் விழாக்கோலம்: ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் இயக்கத்தில் 'கூலி' படம் வெளியாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, கோவையில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. கோவையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட காட்சிகளாக திரையிடப்பட்ட 'கூலி' படத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால், காலை முதல் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கினர்.
உலகம் முழுவதும் 5,000 ஸ்கிரீன்களில் 'கூலி' ரிலீஸ்... கோவை, திருச்சியில் ரஜினி பேன்ஸ் உற்சாக கொண்டாட்டம்! pic.twitter.com/D69Qh50bys
— Indian Express Tamil (@IeTamil) August 14, 2025
சாந்தி தியேட்டர்: ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள சாந்தி திரையரங்கில், மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீ முருகன் தியேட்டர்: துடியலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ முருகன் திரையரங்கிலும் இதேபோன்று ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
திருச்சியில் இலவச ஆட்டோ சேவை: 'கூலி' பட வெளியீட்டை வரவேற்கும் விதமாக, திருச்சியில் வித்தியாசமான கொண்டாட்டம் நடந்தது. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டிகளை ஏந்தியபடி ஊர்வலமாகத் திரையரங்கிற்கு வந்தனர். திரையரங்க வாசலில் வைக்கப்பட்டிருந்த 'கூலி' படத்தின் பிளக்ஸ் பேனர்களுக்கு மலர் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இலவச ஆட்டோ சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீண்ட காலத்துக்கு பிறகு, ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினியின் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வசூலை நிகழ்த்தி, முதல் நாளே கூலி திரைப்படம் சாதனை படைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட 100 நாடுகளில் சேர்த்து 4500 - 5000 திரைகளில் கூலி திரைப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.