73% பேருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை: அரசு விதிமுறைகள் அறிவிப்பு

இந்நிலையில் இன்று தங்க நகைக்கடன் தள்ளுபடியை பெறும் நபர்கள் யார், யாருக்கு வங்கி நகைக் கடன் ரத்து இல்லை என்பது போன்ற தகவல்களை வெளியிட்டார் கூட்டுறவுத்துறை பதிவாளர்.

Gold Savings Account

Cooperative bank gold loan waive off : கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் (40 கிராம்) வரை நகைகளை அடமானம் வைத்திருந்தால் அவர்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறிய முதல்வர் கூட்டுறவு சங்கத்தில் இருக்கும் நகைக் கடன்களை ஆய்வு செய்யும் பணியை நவம்பர் 30ம் தேதி அன்று முடிக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். ஆனாலும் பணிகள் நிறைவடைய தாமதமாகியுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடியை பெறுவதற்கு தேவையான தகுதிகளை பட்டியலிட்டு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழக அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டு அனுப்பியிருந்தார்.

நகைக்கடன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இதர மாவட்டங்களில் இருந்து அலுவலர்களை பெற்று அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தகவல்கள் பதிவேற்றும் பணி நடைபெற்றது. , 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கடன் பெற தகுதியற்றவை என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தங்க நகைக்கடன் தள்ளுபடியை பெறும் நபர்கள் யார், யாருக்கு வங்கிக் கடன் ரத்து இல்லை என்பது போன்ற தகவல்களை வெளியிட்டார் கூட்டுறவுத்துறை பதிவாளர்.

தங்க நகைக்கடன் தள்ளுபடியை பெற தகுதியற்றவர்கள் யார்?

நகை கடனை முழுமையாக தள்ளுபடி செய்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை. அதே போன்று 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை.

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கூட்டுறவு வங்கிகளில் வைத்திருக்கும் நகைகளுக்கான கடனை தள்ளுபடி செய்யாது.

கூட்டறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள், ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், குடும்ப அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை வைத்திருப்போர் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்று பல முக்கிய தகவல்களை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தற்போது கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 48 லட்சம் நகைக்கடங்களில் 35 லட்சம் நபர்களின் நகைக்கடன் ரத்து இல்லை. அதாவது 73% பேருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cooperative bank gold loan waive off 35 lakhs members are not eligible

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express