New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a492.jpg)
Tamil Nadu news today in tamil,
சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், முருகதாஸ், ஏட்டு மலைபிரகாஷ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்
Tamil Nadu news today in tamil,
மதுரை சிந்தாமணி ரிங்ரோடு பகுதியில் லாரி ஒன்று பஞ்சர் ஆகி சாலை ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லாரி டிரைவரை அழைத்து லஞ்சம் கேட்டுள்ளனர்.
உடனே டிரைவர் நூறு ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதற்கு அந்த போலீஸ்காரர், 'அரைபாடி லாரி டிரைவர் 500 ரூவா கொடுக்குறாங்க. கண்டிப்பா நீ 1000 ரூவா கொடுக்க வேண்டும்' என்கிறார்.
என்னிடம் பணம் இல்லை என்று டிரைவர் கூறியும், அவருடன் போலீசார் தொடர்ந்து வாக்குவாதம் செய்கிறார். இதனையடுத்து, அந்த டிரைவர் புலம்பிக் கொண்டே போலீசிடம் 1000 ரூபாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநகர போலீஸ் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தகவல் கிடைத்தது. உரிய விசாரணை நடத்திய ஆணையர், லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், முருகதாஸ், ஏட்டு மலைபிரகாஷ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.