Cops trace missing first Tamil translation of Bible to King’s Collection in London: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பைபிளின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பாகக் கருதப்படும் கையெழுத்துப் பிரதி, லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்சனில் இருந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் அறிக்கையின்படி, தமிழில் ‘புதிய ஏற்பாடு’ மொழிபெயர்ப்பு 1715 இல் டேனிஷ் மிஷனரி பார்தோலோமேயஸ் ஜீகன்பால்கு என்பவரால் அச்சிடப்பட்டது.
இதையும் படியுங்கள்: தேசிய போலீஸ் அகாடமி இயக்குனராக தமிழக ஐ.பி.எஸ்: யார் இந்த சேர்மராஜன்?
1682 இல் பிறந்த பார்தோலோமேயஸ், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கு அருகில், கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய டேனிஷ் காலனியான டிரான்க்யூபார் (தரங்கம்பாடியின் ஆங்கில வடிவம்) வந்தடைந்தார். பார்தோலோமேயஸ் ஒரு அச்சகம் அமைத்து தமிழ் மொழி மற்றும் இந்திய மதம் மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆய்வுகளை வெளியிட்டார். பின்னர் அவர் 1719 இல் தனது 37வது வயதில் இறந்தார். அப்போது, அவர் புதிய ஏற்பாடு மற்றும் ரூத் மூலம் ஆதியாகமத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழில் பல விரிவான கட்டுரைகள், இரண்டு தேவாலய கட்டிடங்கள், செமினரி மற்றும் 250 ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்களை விட்டுச் சென்றார்.
ஸ்வார்ட்ஸ் என்ற மற்றொரு மிஷனரி புதிய ஏற்பாட்டின் முதல் பிரதியை அப்போதைய ஆட்சியாளராக இருந்த துலாஜி ராஜா சரபோஜியிடம் ஒப்படைத்ததாக ஒரு வலுவான ஊகம் இருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது. தமிழக அரசு கையகப்படுத்திய பிறகு, பழங்காலப் புத்தகம் சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப் பொருளாக மாறியது.
2005ம் ஆண்டு சரபோஜி அரண்மனை துணை நிர்வாகி தஞ்சை மேற்கு போலீசாரிடம், நூலகத்தில் இருந்து பழங்கால பைபிள் திருடப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். பின்னர், 2017 இல் ஒரு புகாரின் அடிப்படையில், ஐ.பி.சி பிரிவு 380 (குடியிருப்பு வீட்டில் திருட்டு போன்றவை) சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து வழக்கைத் தொடர்ந்தது. அதன்படி, பைபிளைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையின் போது, பார்வையாளர்களின் பதிவேட்டைப் பார்த்ததில், 2005 ஆம் ஆண்டில் வெளிநாட்டினர் குழு ஒன்று அருங்காட்சியகத்திற்கு வந்துச் சென்றது தெரியவந்தது. இந்த பார்வையாளர்கள் பார்தோலோமியஸ் ஜீகன்பால்கின் நினைவாக ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குறிப்பிட்டது.
அதிகாரிகள் பின்னர் பல பழங்கால சேகரிப்பு வலைத்தளங்களில் தேடினர் மற்றும் ஆயிரக்கணக்கான அச்சிடப்பட்ட புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை உள்ளடக்கிய ஜார்ஜ் III இன் சேகரிப்பில் ஆய்வு செய்தனர். அந்த புத்தகங்களில், கிங்ஸ் இணையதளத்தில் தஞ்சையைச் சேர்ந்த ராஜா சரபோஜியின் கையொப்பத்துடன் 17 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட காணாமல் போன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்தனர்.
"யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் பைபிளை மீட்டெடுத்து சரஸ்வதி மஹால் நூலகத்தில் விரைவில் மீண்டும் வைக்கப்படும் என சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு நம்புகிறது" என்று ஒரு அறிக்கை குறிப்பிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.