தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிர்த்து 978 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் கணிசமாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 4,000ஐ தாண்டி பதிவாகி வந்த நிலையில் இன்று 3,827 ஆக பதிவாகி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 95 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 33,518 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 937 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ரு சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 61 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,571ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை இல்லாத அளவில் இன்று 3,793 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 66,571 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் சதவீதம் 57.89% ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 46,833 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,747 பேருக்கு கொரோனா வைரஸ்ட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 245 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 213 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 182 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தி 175 பேருக்கும்,
தேனி மாவட்டத்தில் 119 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 109 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 86 பேருக்கும், நெல்லை மாவட்டத்தில் 84 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 78 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 60 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 58
பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 51 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 49 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 45 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு 2,000க்கு மேல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக 2,000க்கும் குறைவாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.
இன்று காலையில் ஊடகங்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறினார். இதனால், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாக தெரிகிறது.