/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-03T101731.593.jpg)
A special helpdesk has been set up at the Dr MGR Chennai Central station to provide assistance regarding the mishap Tamil News
Coromandel Express train derails in Odisha's Balasore Tamil News: கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.
அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-03T102641.477.jpg)
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு பணிகள் குறித்த நிலவரங்களை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆய்வு செய்தார். அதே சமயம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது என்றும், 900 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-03T103519.797.jpg)
இந்நிலையில், ஒடிசாவின் பாலசோரில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, விபத்து குறித்து உதவி வழங்குவதற்காக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, சிறப்பு உதவி மையம் (ஹெல்ப் டெஸ்க்) மற்றும் சென்னை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படுவோர் பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
044-25330952, 044-25330953 மற்றும் 044-25354771.
Special help desks have been set up at Dr MGR Central to render assistance in connection with #CoromandelExpress mishap in Odisha today
Helpline numbers of Chennai Control office and help desks :
044-25330952, 044-25330953 & 044-25354771 pic.twitter.com/au4puUtWBU— Southern Railway (@GMSRailway) June 2, 2023
#InPictures | Rescue operation is underway at the site where Coromandel Express, Bengaluru-Howrah Express and a goods train derailed, in Balasore district.
Follow LIVE Updates https://t.co/fr4XuHYc2kpic.twitter.com/7TgTF8iIn8— The Indian Express (@IndianExpress) June 3, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.