கொரோனா: தேனாம்பேட்டை, ராயபுரத்தில் அதிக தெருக்கள் பாதிப்பு

corona in chennai: சென்னையில் உள்ள 375 தெருக்களில் 10க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

chennai street

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலேயே கொரோனா அதிகம் பாதித்த மாவட்டமாக சென்னை உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 5,445 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, 10க்கும் மேற்பட்ட கோவிட் பாசிட்டிவ் நபர்கள் உள்ள சென்னை தெருக்களின் எண்ணிக்கை மூன்று நாட்களில் 308 லிருந்து 375ஆக உயர்ந்துள்ளது.

கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பிடி ராஜன் சாலை மற்றும் ஆற்காடு சாலை, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட எல்டாம்ஸ் சாலை, ஹாரிங்டன் சாலை, சூளைமேடு, அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட TNHB அண்ணா நகர் மேற்கு அவென்யூ, நெல்சன் மாணிக்கம் சாலை, கொன்னூர் சாலை, அடையார் மண்டலத்திற்குட்பட்ட சர்தார் பட்டேல் சலை, LB சாலை, வேளச்சேரி பிரதான சாலை மற்றும் பெசன்ட் நகர் அவன்யூ சாலை ஆகியவைகள் இந்த பட்டியலில் உள்ளன.

தேனாம்பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களில் 10க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள தெருக்கள் அதிகமாக உள்ளது. தேனாம்பேட்டையில் 83 தெருக்களும் ராயபுரத்தில் 74 தெருக்களும் உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 6க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள தெருக்கள் 840ஆக இருந்த நிலையில் புதன்கிழமை அந்த எண்ணிக்கை 993 ஆக உயர்ந்துள்ளது.

அடையார் மண்டலத்திற்குட்பட்ட பீச் சாலை மற்றும் வடக்கு மாட தெரு மற்றும் தேனாம்பேட்டை ஆர்ஏ புரம் போன்ற பகுதிகளில் 6க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona affected street in chennai increases

Next Story
தினமும் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே ரெம்ட்சிவிர் மருந்து : சுகாதார செயலாளர் தகவல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com