corona antibodies test : ஐடி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில்துறை நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்கள் என அனைவருக்கும் கூடிய விரைவில் கொரோனா ஆண்டிபாடி சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஆன்பாடி சோதனை:
நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் வழிக்காட்டுதலின்படி ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் சோதனையானது குறைந்த நேரத்தில் அதாவது 15 நிமிடத்தில் ஒருவருக்கு நோய் தொற்று உள்ளதா என கண்டறிய இயலும்.
இதுக்குறித்து ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, “ முதற்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முதல்நிலை பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் பரிசோதனை சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது . பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கும் மேற்கொள்ளப்படும் .
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 10,000 கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகின்றது.
நேற்று மாநகராட்சி தலைமையகத்தில் பணிபுரியும் 564 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 452 நபர்களுக்கு எந்த தொற்று இல்லை. 84 நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி நோய் தொற்று வர வாய்ப்பில்லை. 28 நபர்களுக்கு தொற்று இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.இந்த 28 நபர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும், இந்த ஆன்பாடி சோதனை மூலம் கொரோனா காலத்தில் பணிப்புரிந்த வங்கி ஊழியர்கள், ஊடகத்துறை சார்ந்த ஊழியர்கள், தொழில்துறை சார்ந்த ஊழியர்களுக்கு முதலில் எடுக்கப்படும் என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.