தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 911ஆக உயர்வு; ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை – தலைமை செயலாளர்

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மாலை அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, “கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியான 77 பேரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இதனால் […]

corona cases in tamil nadu raised 911 chief secretary shanmugam press meet beela rajesh

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று மாலை அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, “கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியான 77 பேரும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இதனால் அவர்கள் மூலம் வேறு யாருக்கும் பரவ வாய்ப்பில்லை.

ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவக் குழுவின் பரிந்துரைகளை முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார். பிரதமர் உடனான ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார்.

கொரோனா பரவலில் தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில் தான் இருக்கிறது. மூன்றாம் நிலைக்கு செல்லவில்லை. அந்த நிலைக்கு செல்லக் கூடாது என்பதற்காக தான் இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தீவிர சுவாச பிரச்சனை உள்ளவர்களை சோதித்ததில் யாருக்கும் கொரோனா இல்லை.

பாதுகாப்பு பணியில் இருக்கக் கூடிய காவலர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும்.

ஈரோட்டில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சிகிச்சை அளித்ததன் மூலம், மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டது.

என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona cases in tamil nadu raised 911 chief secretary shanmugam press meet beela rajesh

Next Story
காவல்துறையினருக்கு ஊதியம் போதுமானதாக இல்லை – உயர்நீதிமன்றம் கவலைchennai high court, madras high court, police, government doctors, health workers, salary, centre, states, corona virus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com