corona chennai zones : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 0.5 சதவீதம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்திருந்தது. தற்போது மேலும் 2.5 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 12 மண்டலங்களில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் 9.6 சதவீதமும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 4.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அம்பத்தூர் மண்டலத்தில் 3.8 சதவீதமும், அடையாறில் 3.5 சதவீதம், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதம், கோடம்பாக்கம் 2.7 சதவீதம், அண்ணாநகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.அந்தவகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பை விட 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் பெருங்குடியில் 0.5 சதவீதமும், வளசரவாக்கத்தில் 0.9 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
குறைந்தது கடந்த மூன்று மாதங்களாக, அதிக இறப்பு விகிதங்களை கணக்கில் கொண்டு இந்த மண்டலங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக நிறைய வீடுகள் கொண்ட பகுதிகள், அடுக்கடுக்காக அருகில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்கள் இந்த பகுதிகளில் ஏராளம். அவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்படுகிறது.
அதே போல், மூத்த குடிமக்கள் மத்தியில் நோய் பரவல் அதிகரித்துள்ளது. இது இறுதியில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுக்கிறது, தொடர்ந்து இந்த பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தனிமைப்படுத்துதல் தொடர்வதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனாம்பேட்டை கொரோனா இறப்பு விகிதம் 2.55% , 60 வயதிற்கு மேற்பட்ட கணக்கெடுக்கப்பட்ட மக்கள்தொகையில் 1.9% ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil