தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: சென்னை, கோவையில் அதிகம்
தமிழகத்தில் கொரோனாே பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் கோவை உள்ளது. முதல் 10 இடங்களில் இருந்த மதுரை தற்போது 11வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் கொரோனாே பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது இடத்தில் கோவை உள்ளது. முதல் 10 இடங்களில் இருந்த மதுரை தற்போது 11வது இடத்தில் உள்ளது.
Advertisment
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.
தமிழக அரசு ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,204 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று?- பட்டியல் இதோ,
தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது. சென்னையில் 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 126 பேரும், திருப்பூரில் 79 பேரும், ஈரோட்டில் 64 பேரும், திண்டுக்கல்லில் 65 பேரும், நெல்லையில் 56 பேரும், நாமக்கல்லில் 46 பேரும், செங்கல்பட்டில் 45 பேரும், திருச்சியில் 43 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”