/indian-express-tamil/media/media_files/2025/06/06/YiAGHInteVQipQgmerUt.jpg)
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை கர்ப்பிணிப் பெண்களுக்குச் சில அத்தியாவசிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. நோய் பரவலைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணிதல்: கர்ப்பிணிப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
மருத்துவ ஆலோசனை: அதிக காய்ச்சல், இருமல், உடல்வலி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால், மகப்பேறு காலத்திற்கு முன்பே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கூட்டத்தைத் தவிர்த்தல்: நெரிசல் மிகுந்த பகுதிகள் மற்றும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்புகள் 5,000ஐத் தாண்டியுள்ள நிலையில், மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஐதராபாத்தில் பணியாற்றி வந்த அவருக்கு அங்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, சொந்த ஊருக்கு வந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சூழலில், தமிழக அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கர்ப்பிணிகள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.