/tamil-ie/media/media_files/uploads/2020/06/a162-1.jpg)
corona for o raja ops brother
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதி ஒன்றின் தனிமை முகாமில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஒ.ராஜா பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.