தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அறிவித்தது. அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து குவாரண்டைன் ; நட்சத்திர விடுதியில் மரணமடைந்த நபர்!
அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ . சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சதன் பிரபாகரனின் நண்பர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதியானது. அவரது மனைவி, மகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதும் உறுதியானது. தற்போது அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனிடையே உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் திமு.க எம்.எல்.ஏ உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது அதிமுகவின் எம்ம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமரகுரு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வசந்த கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் ஊரடங்கு நீட்டிக்க 88% பேர் விருப்பம்: சென்னை ஐ.ஐ.டி சர்வே
எம்.எல்.ஏ குமரகுரு, கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கால்நடை மருத்துவக்கல்லூரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்த நிகழ்வில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜுலை.1 வரை கொரோனாவால் 878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 379 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 497 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்த திமுக எம்.எல்.ஏக்கள் ;
சேப்பாக்கம் – ஜெ.அன்பழகன் (மறைவு)
ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன் (discharged)
செய்யாறு – ஆர்.டி.அரசு
செஞ்சி – மஸ்தான்
கொரோனா பாதித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்:
பாலக்கோடு – கே.பி.அன்பழகன்
பழனி – ஸ்ரீபெரும்புதூர்
பரமக்குடி – சதன் பிரபாகர்
உளுந்தூர்பேட்டை – குமருகுரு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil