தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் தமிழகத்தில் பரவியது டெல்டா மாறுபாடு (B 1.617.2) என்பது தெரியவந்துள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள தகவலில், டிசம்பர் 2020 முதல் மே 2021 வரை 1159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரு மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. குடும்பமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர், ஒரே பகுதி அல்லது நிகழ்ச்சியின் மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளானோர், இளம் வயதினர், குழந்தைகள், இணை நோய்களின்றி கொரோனாவால் உயிரிழந்தோர், தடுப்பூசி செலுத்தியும் பாதிப்புக்குள்ளானோரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
அதில் 554 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி 386 பேர்(70%) டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 47 மாதிரிகளில்(8.5%) ஆல்ஃபா வைரஸ் காணப்பட்டது. 605 பேரின் முடிவுகள் வரவில்லை. டெல்டா வகை தொற்றுக்குள்ளானோரில் 81% பேர் வளரிளம் பருவத்தினர், வயதானவர்கள் . 19% குழந்தைகளின் காணப்பட்டது. ஒரே பகுதி அல்லது நிகழ்ச்சியின் வாயிலாக பாதிப்புக்குள்ளானவர்களில் 30% பேரிடமும், குடும்பங்களாக பாதிக்கப்பட்டவர்களில் 23% பேரிடமும் அந்த வகை தொற்று காணப்பட்டுள்ளது.
இந்த 554 மாதிரிகளில் 94 மாதிரிகள் குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்டவை. அதில் 76 சதவீத குழந்தைகள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொண்ட 66 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதில் அதில் 55 பேருக்கு டெல்டா வைரஸ் காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil