Advertisment

திருச்சியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு: 7 கர்ப்பிணிகளுக்கு தொற்று - டீன் நேரு தகவல்

திருச்சி, அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில், கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழு கர்ப்பிணி பெண்கள் உட்பட 9 பேர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Corona special treatment center opened in Trichy, 7 pregnant women tests positive, திருச்சியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு, 7 கர்ப்பிணிகளுக்கு தொற்று - டீன் நேரு தகவல், Corona special treatment center, Trichy, 7 pregnant women tests positive

திருச்சியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு: 7 கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதி

திருச்சி, அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில், கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழு கர்ப்பிணி பெண்கள் உட்பட 9 பேர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment
publive-image

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும், கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

publive-image

கி.ஆ.பெ., விசுவநாதம் மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரானா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது, 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம், 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார், 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது, திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும், 300க்கும் அதிகமானோர் கொரானா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

publive-image

தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. அதை எதிர்கொள்ள, திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது' என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

publive-image

இந்த நிலையில், திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 'அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக' அரசு மருத்துவமனை டீன் நேரு தெரிவித்துள்ளார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coronavirus Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment