தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் 2019 ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலையில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர். கொரோன தடுப்பூசி 1 வருடத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா 2ம் அலை கூடுதலாக உயிரிழப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு தொடகத்தில் இருந்து கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இந்நிலையில் கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 முதல் 8 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது தினமும் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 42 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil