corona test result : கொரோனா சோதனை செய்துக் கொண்டவர்கள் இனி டெஸ்ட் முடிவை ஃபோனில் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்துக் கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. அதிகப்பட்ச மாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1200 பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,575ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவித்து உள்ளது.இதனைத்தொடர்ந்து கொரோனா முடிவுகளை தெரிந்துக் கொள்ளவும் புதிய வழியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, மொபைல் எஸ்எம்எஸ் மூலம் கொரோனா முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். கொரோனா டெஸ்ட் எடுத்தவர்கள் 4 மணி நேரத்தில் தங்களது முடிவுகளை தெரிந்து, டெஸ்ட் எடுத்தவர்களில் தொற்று உறுதியானவர்கள் உடனே மாநகராட்சி ஊழியர்களால் கணக்காணிக்கப்படுவார்கள். தற்போது, கொரோனா டெஸ்ட் எடுத்தவர்கள், தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ள மாநகராட்சி ஊழியர்களை தொடர்பு கொள்கின்றனர். சிலர் தங்களது டெஸ்ட் முடிவுகளை அறிந்த கொள்ள பல நாட்கள் காத்துக் கொண்டு இருக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை போக்கும் விதமாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
பாதியில் நிற்கும் படிப்பை தொடர கைக்கொடுக்கும் பிரபல வங்கி.. யூஸ் பண்ணிக்கோங்க!
கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் அடையார் போன்ற மண்டலங்களில் போன்ற மண்டலங்களில் வசிக்கும் மக்கள், மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா டெஸ்ட் முடிவுகளை சொல்ல தவறுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். முடிவுகளை அறிந்துக் கொள்வதற்குள் தினமும் ஒருவித அச்சம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Corona test result chennai corporation planning new idea