/tamil-ie/media/media_files/uploads/2018/01/bus-strike..1.jpg)
corona test result
corona test result : பஸ்சில் சென்ற தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவல் கசிந்ததால் மற்ற பயணிகள் பதற்றத்தில் பேருந்தில் இருந்து தலைதெறிக்க ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் காரணமாக அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக அவரின் மனைவியும் மருத்துவமனையில் தங்கி இருந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, இந்த தம்பதியனருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நேற்று காலை இருவரையும் வீட்டிற்கு செல்ல மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். இதையடுத்து, இருவரும் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்சில் வடலுாருக்கு சென்றனர். இந்நிலையில், பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது பஸ், காடாம்புலியூர் வழியில் சென்றுக் கொண்டிருந்தது. .இதையடுத்து, பஸ் கண்டக்டரிடம் அந்த தம்பதியர்கள் மொபைலை கொடுத்து அதிகாரிகளிடம் பேச வைத்தனர். அவர்களின் அறிருத்தல் படி, தம்பதியினரை காடாம்புலியூரில் இறக்கி விட ஓட்டுநரும், நடத்துனரும் முடிவு செய்தனர்.
இந்நிலையில்,இந்த தகவல் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கு கசிந்தது. ஓடும் பஸ்சில் சலசலப்பு ஏற்பட அதிர்ச்சியடைந்த கண்டக்டர், பஸ்சை காடாம்புலியூர் போலீஸ் நிலையம் அருகே நிறுத்தினார்.
பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அவசர அவசரமாக இறங்கி ஒட்டம் பிடித்தனர்.பின், 108 ஆம்புலன்ஸ் மூலம் தம்பதியை சுகாதாரத்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.