Advertisment

Tamil News Today Highlights: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானம் விற்க தடை - மாநில தேர்தல் ஆணையம்

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 08 February 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today Highlights: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானம் விற்க தடை - மாநில தேர்தல் ஆணையம்

Tamil Nadu News Today Highlights: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 96-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: கோவா தேர்தல்.. ராகுல் பிரச்சாரம்!

கோவா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வரும் 11ஆம் தேதி  அங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பாஜக தான் உண்மையான துண்டாடும் கும்பல்.. சசி தரூர்!

பிரதமர் மோடி மக்களவையில் பேசியது முழுக்க, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியல் பேச்சாகவே இருந்தது. மக்களை மத, அடிப்படையிலும், மொழி வாரியாகவும் பிரித்து, வட- தென் இந்தியாவை பிரித்த பாஜக தான் உண்மையான துண்டாடும் கும்பல் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.

Tamil Nadu News LIVE Updates:

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஏற்கெனவே நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் ’ விதிகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:29 (IST) 08 Feb 2022
    ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறவில்லை

    ஆஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறவில்லை


  • 20:29 (IST) 08 Feb 2022
    ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறவில்லை

    ஆஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறவில்லை


  • 20:15 (IST) 08 Feb 2022
    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானம் விற்க தடை - மாநில தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுபானம் விற்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை 17-ம் தேதி முதல் 19 தேதி வரையிலும், பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22 –ம் தேதியும் விதிக்கப்படுகிறது


  • 19:53 (IST) 08 Feb 2022
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,519 பேருக்கு கொரோனா; 37 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 5,104 ஆக இருந்த நிலையில் இன்று 4,519 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளனர்


  • 19:48 (IST) 08 Feb 2022
    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள் மற்றும் 79 படகுகளையும் விடுவிக்க கோரியும், மீனவர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்


  • 19:27 (IST) 08 Feb 2022
    உண்மையை பேசுவதால் பாஜக எங்களை கண்டு பயப்படுகிறது - ராகுல் காந்தி

    பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தனது உரையின் போது, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். என் கொள்ளு தாத்தா நாட்டிற்கு சேவை செய்தார், எனக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை. நாங்கள் உண்மையைச் சொல்வதால் பாஜக காங்கிரஸைக் கண்டு பயப்படுகிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்


  • 19:15 (IST) 08 Feb 2022
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர எம்.எல்.ஏ. ரோஜா நன்றி

    சித்தூர் தமிழ் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கோரிக்கையை மின்னலை விட வேகமாக நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களையும் எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்துள்ளார்


  • 19:08 (IST) 08 Feb 2022
    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு தேர்வு - கல்வித்துறை உத்தரவு

    தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு தேர்வு நடத்த உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் ஒரு லட்சம் ஆசிரியர்களையும் சோதித்து பார்க்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது


  • 18:32 (IST) 08 Feb 2022
    ஹிஜாப் விவகாரத்தை எழுப்பி மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    ஹிஜாப் விவகாரத்தை எழுப்பி மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ், சிபிஎம், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மக்களவைக் கூடியதும் ஹிஜாப் விவகாரத்தை எழுப்பி ஒன்றிய அரச் விளக்கமளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.


  • 17:24 (IST) 08 Feb 2022
    கர்நாடகாவில் சில கல்வி நிறுவனங்களில் நிலைமை கைமீறி போய்விட்டது - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

    கர்நாடகாவில் சில கல்வி நிறுவனங்களில் நிலைமை கைமீறி போய்விட்டது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடகாவில் சில கல்வி நிறுவனங்களில் நிலைமை கைமீறிப் போய்விட்டது. ஒரு கல்லூரியில் தேசியக் கொடிக்குப் பதிலாக காவிக்கொடி ஏற்றப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை ஒரு வாரம் மூட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆன்லைனில் கற்பித்தல் தொடரலாம்.” என்று தெரிவித்துள்ளார்.


  • 17:18 (IST) 08 Feb 2022
    அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடியுங்கள்; கர்நாடகா மக்களுக்கு ஐகோர்ட் வேண்டுகோள்

    ஹிஜாப் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கடைபிடிக்குமாரு கர்நாடக உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

    நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் பொது அமைதிக்கு இடையூறாக இருப்பதாக அரசு வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி தெரிவித்ததை அடுத்து நீதிபதி கிருஷ்ணா தீட்சித் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

    இந்த விசாரணையை விரைவில் முடிக்க முடியும் என உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. "பொதுமக்களின் அறிவு மற்றும் நல்லொழுக்கத்தின் மீது நீதிமன்றம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது" என்று நீதிபதி கூறினார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 17:10 (IST) 08 Feb 2022
    ஹிஜாப் சர்ச்சை: உயர்நிலைப்பள்ளி கல்லூரிகளை 3 நாட்களுக்கு மூட கர்நாடகா அரசு உத்தரவு

    கர்நாடகாவில் கல்லூரியில் ஹிஜாப் அணிவது குறித்த சர்ச்சையில், உயர்நிலைப்பள்ளி கல்லூரிகளை மூடுவதற்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், “மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.


  • 16:10 (IST) 08 Feb 2022
    சென்னை மாநகராட்சி வார்டுகளில் ஈபிஎஸ் பிரச்சாரம்

    நகர்புற உளளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகபிரச்சார செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஈபிஎஸ் பொங்கல் தொகுப்பு மக்களுக்கு வழங்கப்படவில்லை; திமுகவினருக்குதான் வழங்கப்பட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.


  • 16:06 (IST) 08 Feb 2022
    தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்

    காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் சர்ச்சை ட்வீட் செய்த நிலையில், இந்த பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


  • 16:05 (IST) 08 Feb 2022
    பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் - பிரதமர் மோடி காணொலி மூலம் பிரசாரம்

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் - பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி காணொலி மூலம் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இதில் சீக்கியர்களுக்கு துணை நிற்கும் அரசாக பாஜக எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.


  • 15:23 (IST) 08 Feb 2022
    சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினருக்கும் நன்றி - திருமாவளவன்

    நீட்விலக்கு மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


  • 15:22 (IST) 08 Feb 2022
    இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.


  • 15:12 (IST) 08 Feb 2022
    10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு மாற்றம்

    தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு வரும் 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலகர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.


  • 14:53 (IST) 08 Feb 2022
    கிரிப்டோகரன்சியில் இந்தியர்களின் முதலீடு விவரம் இல்லை - மத்திய அரசு

    கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை, முதலீட்டுத் தொகை குறித்த தரவுகள் ஏதும் இல்லை என மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


  • 14:53 (IST) 08 Feb 2022
    கிரிப்டோகரன்சியில் இந்தியர்களின் முதலீடு விவரம் இல்லை - மத்திய அரசு

    கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை, முதலீட்டுத் தொகை குறித்த தரவுகள் ஏதும் இல்லை என மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


  • 14:25 (IST) 08 Feb 2022
    நெடுஞ்சாலை போக்குவரத்து தடை உத்தரவு - வனத்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

    ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 14:06 (IST) 08 Feb 2022
    10 ரூபாய் நாணயத்தை தயக்கமின்றி உபயோகிக்கலாம் - மத்திய அரசு

    10 ரூபாய் நாணயத்தை எந்த தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும். டெண்டர், சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 13:32 (IST) 08 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 57,778 பேர் போட்டி

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநகராட்சி - 11196, நகராட்சி - 17922, பேரூராட்சி - 28660 பேர் போட்டி என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.


  • 13:29 (IST) 08 Feb 2022
    கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்

    கமல்ஹாசனின் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் பீம்பாய் பீம்பாய் என்றழைக்கப்பட்ட பிரவீன் குமார் காலமானார். 74 வயதாகும் அவர், நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


  • 13:28 (IST) 08 Feb 2022
    கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்

    கமல்ஹாசனின் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் பீம்பாய் பீம்பாய் என்றழைக்கப்பட்ட பிரவீன் குமார் காலமானார். 74 வயதாகும் அவர், நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


  • 13:13 (IST) 08 Feb 2022
    10,12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்

    10,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிப்.10ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் தேர்வு தேதி மாற்றம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.


  • 12:55 (IST) 08 Feb 2022
    மோடி பேச்சு

    நாடு வளர்ச்சி அடைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. தற்போது வளர்ச்சிப் பாதையின் குறுக்கே அவர்கள் நிற்கின்றனர் என்று மோடி பேச்சு


  • 12:08 (IST) 08 Feb 2022
    கல்வி நிலையங்களை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

    கர்நாடக கல்வி நிலையங்களில் பிரச்சனைகளை கிளப்பிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக உள்த்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பேச்சு


  • 12:06 (IST) 08 Feb 2022
    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

    சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அசாம் கான், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் அவரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.


  • 11:46 (IST) 08 Feb 2022
    கொரோனா பெருந்தொற்று மனிதகுலம் 100 ஆண்டுகளில் கண்டிராத இழப்பை சந்தித்துள்ளது

    கொரோனா பெருந்தொற்று மனிதகுலம் 100 ஆண்டுகளில் கண்டிராத இழப்பை சந்தித்துள்ளது என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


  • 11:40 (IST) 08 Feb 2022
    கர்நாடகா ஹிஜாப் தொடர்பாக பசவராஜ் பொம்மை கருத்து

    பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியாக இருக்கவும் மாணவிகளை படிக்க வைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவிற்காக காத்திருங்கள் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.


  • 10:51 (IST) 08 Feb 2022
    தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம்.. சசிகலா வலியுறுத்தல்!

    தமிழகத்தில் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும், வரிச் சலுகை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என வி.கே.சசிகலா வலியுறுத்தி உள்ளார்.


  • 10:47 (IST) 08 Feb 2022
    நீட் விலக்கு மசோதா.. சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் தொடங்கியது!

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற, தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் தொடங்கியது.


  • 10:01 (IST) 08 Feb 2022
    தஞ்சை மாணவி தற்கொலை… அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்!

    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை குறித்த வழக்கில், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து’ உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.


  • 10:01 (IST) 08 Feb 2022
    தேர்தல்.. விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டி!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சிக்கும் ஆதரவில்லாமல் தனித்து போட்டியிடும் என இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.


  • 10:01 (IST) 08 Feb 2022
    மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, கர்நாடக முதல்வர் ஆலோசனை!

    கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நதிநீர் பிரச்சனைகள் குறித்து நேற்று எம்.பி.க்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.


  • 09:26 (IST) 08 Feb 2022
    இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,188 பேர் உயிரிழப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில், 1,188 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,80, 456 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9,94,891ஆக உள்ளது.


  • 09:26 (IST) 08 Feb 2022
    ஹிஜாப் விவகாரம்.. மாணவிகள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

    கர்நாடகாவில், ஹிஜாப் அணிந்து வந்தால் வகுப்பறைக்குள் அனுமதிக்க முடியாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என பள்ளி மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் அளித்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


  • 08:35 (IST) 08 Feb 2022
    எம்பிபிஎஸ் கலந்தாய்வு.. சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்!

    எம்பிபிஎஸ் படிப்புக்கான, பொதுப் பிரிவு முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற, 6,082 மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.


  • 08:35 (IST) 08 Feb 2022
    தஞ்சை மாணவி தற்கொலை.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க’ உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


  • 08:26 (IST) 08 Feb 2022
    தேர்தல்..சென்னை மாநகராட்சியில், 2,670 வேட்பாளர்கள் போட்டி!

    வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில், 2,670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்த 3,546 பேரில்’ 633 பேர் மனுக்களை திரும்ப வாபஸ் வாங்கினர். மேலும் 243 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.


  • 08:26 (IST) 08 Feb 2022
    நீட் தேர்வில் விலக்கு.. இன்று கூடுகிறது சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர்!

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்ற, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.


  • 08:26 (IST) 08 Feb 2022
    இன்று மாநிலங்களவையில்!

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றுகிறார்.


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment