Advertisment

Tamil News: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 12 February 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

Tamil Nadu News Today Highlights: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 100-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்’ கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,  ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறும். நாகையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu News LIVE Updates:

#IPLAuction2022: ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் ஏலத்தில் முதன் முறையாக பங்கேற்கின்றன. இன்றும், நாளையும் நடைபெறும் ஏலத்தில் 590 வீரர்களின் பெயர், பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

#Ukraine இன்னும் ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்று வெள்ளை மாளிகை சந்தேகம் தெரிவிக்கிறது. எனவே அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமெரிக்கர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:07 (IST) 12 Feb 2022
    எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடக்கம்

    எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது


  • 20:23 (IST) 12 Feb 2022
    தமிழகத்தில் மேலும் 2,812 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் மேலும் 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்


  • 19:33 (IST) 12 Feb 2022
    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வணங்கிவிட்டுத்தான் பிரதமர் மோடி பதவி ஏற்றுள்ளார் - எல்.முருகன்

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வணங்கிவிட்டுத்தான் பிரதமர் மோடி பதவி ஏற்றுள்ளார் என்று பாஜகவின் முதல் எதிரி அரசியலமைப்பு சட்டம்தான் என கூறிய திருமாவளவனுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.


  • 19:26 (IST) 12 Feb 2022
    பஜாஜ் குழுமத்தின் ராகுல் பஜாஜ் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

    பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்


  • 19:26 (IST) 12 Feb 2022
    பஜாஜ் குழுமத்தின் ராகுல் பஜாஜ் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

    பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்


  • 18:52 (IST) 12 Feb 2022
    மயிலாடுதுறை நகராட்சியில் 19வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

    மயிலாடுதுறை நகராட்சியில் 19வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


  • 18:32 (IST) 12 Feb 2022
    மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்

    திமுகவில் இருந்து விலகி பாஜக சென்ற கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார். இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவர் கட்சியில் மீண்டும் சேர்ந்தார்


  • 18:22 (IST) 12 Feb 2022
    தமிழக பாடத்திட்டம் தரம் குறைந்ததா? - முதல்வர் கேள்வி

    தமிழக பாடத்திட்டம் தரம் குறைந்ததா? இத்திட்டத்தில் படித்த மாணவர்களை கொச்சைப்படுத்துவதா? என அதிமுக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்


  • 18:09 (IST) 12 Feb 2022
    இந்தியாவை சமூக நீதி நாடாக்குவதே எங்களின் இலக்கு - மு.க.ஸ்டாலின்

    இந்தியாவை சமூக நீதி நாடாக்குவதே எங்களின் இலக்கு. ஆனால், அனைத்து அதிகாரங்களையும் பாஜக அரசு தானே வைத்துக்கொள்ள நினைக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்


  • 17:44 (IST) 12 Feb 2022
    காவல்துறையை வைத்து திமுக மிரட்டுகிறது; ஆளுநரிடம் அதிமுக புகார்

    காவல்துறையை வைத்து திமுக மிரட்டுகிறது. தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. சுதந்திரமாக, ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் விதிமீறல் குறித்து ஒட்டு மொத்தமாக தொகுத்து ஆளுநரிடம் கொடுத்துள்ளோம் என ஆளுநரைச் சந்திந்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்


  • 17:29 (IST) 12 Feb 2022
    வன்னியர் உள்இடஒதுக்கீடு; ரத்து செய்த உத்தரவு செல்லும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

    வன்னியர் உள்இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்ற அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை ரத்து செய்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது


  • 17:25 (IST) 12 Feb 2022
    பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் மரணம்

    பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83


  • 16:50 (IST) 12 Feb 2022
    ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுகவினர் சந்திப்பு

    சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட பிரபலங்கள் சந்தித்து பேசியுள்ளனர்.


  • 16:37 (IST) 12 Feb 2022
    அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்கள் அனுமதி

    துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்கள் அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 16:20 (IST) 12 Feb 2022
    ஊரடங்கு உத்தரவில் புதிய தளர்வுகள்

    தமிழகத்தில் பிப்.16 முதல் மார்ச் 2 வரை புதிய ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுசமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


  • 16:20 (IST) 12 Feb 2022
    ஊரடங்கு உத்தரவில் புதிய தளர்வுகள்

    தமிழகத்தில் பிப்.16 முதல் மார்ச் 2 வரை புதிய ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுசமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


  • 16:14 (IST) 12 Feb 2022
    திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 200 பேருக்கும் அனுமதி

    தமிழக்தில் கொரோனா தொற்றின் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 200 பேருக்கும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உததரவிட்டுள்ளது.


  • 16:12 (IST) 12 Feb 2022
    ஆந்திராவில் ரூ.500 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிப்பு

    ஆந்திராவில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. ஆந்திர காவல்துறையினர் சமீபத்தில் 2 லட்சம் கிலோ கஞ்சாவை மொத்தமாக தீயிட்டு அழித்தனர்.


  • 15:23 (IST) 12 Feb 2022
    நீட் விவகாரம் : டிடிவி தினகரன் கண்டனம்

    நீட் விவகாரத்தில் மாறி மாறி குற்றம் சாட்டி மக்களை ஏமாற்றுவதா? என்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் பழனிசாமிக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


  • 15:22 (IST) 12 Feb 2022
    சீக்கியர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரேநபர் பிரதமர் மோடிதான் - ஜே.பி.நட்டா

    பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பஞ்சாபில் நாங்கள் அதிக வாக்குகளை பெறுவதில்லை; ஆனால், எங்களின் அன்பு குறையாமல் இருக்கிறது சீக்கியர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரேநபர் பிரதமர் மோடிதான் என்று கூறியுள்ளார்.


  • 15:16 (IST) 12 Feb 2022
    உத்தரகாண்டில் யோகி ஆதித்யநாத் பிரசாரம்

    நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான் நாட்டின் பாதுகாப்பில் பாஜக எந்த விதத்திலும் சமரசம் செய்யாது என்று உத்தரகாண்டில் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்து வருகிறார்.


  • 14:51 (IST) 12 Feb 2022
    பிஜப்பூர் துப்பாக்கிச்சூடு: சிஆர்பிஎஃப் அதிகாரி சுட்டுக்கொலை

    சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎஃப் அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


  • 14:43 (IST) 12 Feb 2022
    நீட் தேர்வுக்கு காரணம் திமுக தான்... முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்

    நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியில் ஏழை, எளிய மாணவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது பொய் பிரச்சாரம் செய்வதா? நீட் தேர்வுக்கு காரணம் திமுக தான். அதிமுக ஒரு போதும் நீட் தேர்வை ஆதரித்தது இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


  • 14:22 (IST) 12 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 11 ஆவணங்கள் கொண்டு வாக்கு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் காட்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு போன்ற ஆவணங்களில் ஏதெனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


  • 14:09 (IST) 12 Feb 2022
    வார்டு மறுவரையில் தலையிட முடியாது - உயர் நீதிமன்றம்

    இட ஒதுக்கீடு கொள்கைப்படி சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு கூடுதலாக 4 வார்டுகள் ஒதுக்க கோரிய வழக்கில், வார்டு மறுவரையில் தலையிட முடியாது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.


  • 14:09 (IST) 12 Feb 2022
    வார்டு மறுவரையில் தலையிட முடியாது - உயர் நீதிமன்றம்

    இட ஒதுக்கீடு கொள்கைப்படி சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு கூடுதலாக 4 வார்டுகள் ஒதுக்க கோரிய வழக்கில், வார்டு மறுவரையில் தலையிட முடியாது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.


  • 13:31 (IST) 12 Feb 2022
    தமிழ்நாடு இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி வெளியீடு!

    தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 12:35 (IST) 12 Feb 2022
    சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 12:34 (IST) 12 Feb 2022
    15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது

    பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐ.பி.எல். மெகா ஏலத்தில் 161 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.


  • 11:49 (IST) 12 Feb 2022
    வரும் 16-ம் தேதி முதல் மழலையர் பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

    திறந்த வெளி, உள் அரங்கு பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 16-ம் தேதி முதல் மழலையர் பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.


  • 11:48 (IST) 12 Feb 2022
    ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்

    பணமோசடி வழக்கில் கடந்த 10ம் தேதி அன்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.


  • 11:33 (IST) 12 Feb 2022
    திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வாய்ப்பு

    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 11:10 (IST) 12 Feb 2022
    தஞ்சையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

    தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் அருகே மகர்நோம்புச் சாவடி தைக்கால் தெரு பகுதியில், கிளாபத் அமைப்பைச் சேர்ந்த அப்துல்காதர் மற்றும் முகம்மது யாசின் ஆகியோர் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


  • 10:45 (IST) 12 Feb 2022
    மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்-கமல்ஹாசன்!

    தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்-கமல்ஹாசன்!


  • 10:42 (IST) 12 Feb 2022
    வரும் பிப். 19 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது!

    தமிழகத்தில் 2,792 ஊராட்சி, 24 நகராட்சிகளில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. வரும் பிப். 19 ஆம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 10:42 (IST) 12 Feb 2022
    ஒரே நாளில் 50,407 பேருக்கு கொரோனா!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்’ மேலும் 50,407 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில் 804 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,36,962 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர்.


  • 09:52 (IST) 12 Feb 2022
    இஸ்லாமிய பெண்களின் கல்வியை பறிக்க திட்டமிட்ட முயற்சி!

    அரசியலமைப்பு சட்டப்படி அவரவர் விரும்பும் ஆடையை அணிய உரிமை உள்ளது. ஹிஜாப் விவகாரத்தை’ பாஜக கையில் எடுத்திருப்பது, இஸ்லாமிய பெண்களின் கல்வியை பறிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.


  • 09:51 (IST) 12 Feb 2022
    கர்நாடகாவில் என்ன நடந்தாலும் பாஜக தான் பொறுப்பு!

    தேர்தல் நெருங்கும் போதெல்லாம் மதங்களை பிளவுபடுத்தும் பிரச்சனைகளை’ பாஜக உருவாக்கி’ அரசியல் ஆதாயம் தேடுகிறது. கர்நாடகாவில் என்ன நடந்தாலும், அதற்கு பாஜக தான் பொறுப்பு என மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.


  • 09:50 (IST) 12 Feb 2022
    உத்தராகண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்!

    உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று காலை 5 மணிக்கு மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிந்துள்ளது.


  • 09:50 (IST) 12 Feb 2022
    ஓபிஎஸ், ஈபிஎஸ் மோடியின் வாரிசுகளாக மாறிவிட்டார்கள்!

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என பேசுவதன் மூலம், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மோடியின் வாரிசுகளாக மாறிவிட்டார்கள் என பாலகிருஷ்ணன் விமர்னம்.


  • 08:50 (IST) 12 Feb 2022
    உலகில் 70% பேர் தடுப்பூசி செலுத்தினால் தான் கொரோனா குறையும்!

    உலகில் 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நடப்பாண்டின் இறுதிக்குள் கொரோனா தொற்றின் தாக்கம் குறையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.


  • 08:50 (IST) 12 Feb 2022
    22-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

    தமிழ்நாடு முழுவதும் இன்று 22-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை 2வது டோஸ் செலுத்தாத அனைவரும் தவறாமல் பங்கேற்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


  • 08:50 (IST) 12 Feb 2022
    ஊரடங்கு.. ஸ்டாலின் ஆலோசனை!

    தமிழகத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின்’ சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.


Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment